Home நாடு சைட் சாதிக் விவகாரத்தில் ‘பாபாகோமோ’ கைது செய்யப்பட்டார்!

சைட் சாதிக் விவகாரத்தில் ‘பாபாகோமோ’ கைது செய்யப்பட்டார்!

213
0
SHARE

கோலாலம்பூர்: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலின் வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான சைட் சாதிக்கை, தேசிய முன்னணி ஆதரவாளர்கள் சிலர்,  துரத்திய சம்பவத்தில், வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ் அல்லதுபாபாகோமோ’ என அழைக்கப்படும் அம்னோ இளைஞர் பிரிவைச் சேர்ந்தவரை காவல் துறையினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தனர்.

ஆயினும், அது குறித்த காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், மக்களும் காவல் துறையினரும் அதனை ஆதாரமாகக் கொள்ளலாம் எனவும் பாபாகோமோ தெரிவித்தார். இதற்கிடையே, பொய்யான புகாரை அளித்துள்ளதாகக் கூறி சைட் சாதிக் மீது பாபாகோமோ காவல் துறையில் மீது புகார் அளித்துள்ளார்.

22 வினாடி காணொளியில், சைட் சாதிக், தேசிய முன்னணி ஆதரவாளர்களால் சூழப்பட்டக் காட்சி கடந்த சனிக்கிழமை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

அச்சம்பவத்தில் பாபாகோமோ தனது கழுத்தை இறுக்கிப்பிடித்துக் கொண்டதாக சைட் சாதிக் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

Comments