Home வணிகம்/தொழில் நுட்பம் எரிக்சன் வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி!

எரிக்சன் வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி!

1023
0
SHARE
Ad

புது டெல்லி: எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியத் தொகையைச் செலுத்தாத ரிலையன்ஸ் கொம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானியை உச்ச நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தது.

நிலுவைத் தொகையான 453 கோடி ரூபாயை நான்கு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் இல்லையென்றால் மூன்று மாதத் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

முன்னதாக, இந்நிறுவனம் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாங்குவதற்காக எரிக்சன் நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்றிருந்தது. அதனைத் திருப்பிச் செலுத்தாமல் ரிலையன்ஸ் நிறுவனம் ஏமாற்றி வந்த நிலையில், 550 கோடி ரூபாய் கடனைப் பெற்றுத்தருமாறு எரிக்சன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.

#TamilSchoolmychoice

நீதிமன்றம் அத்தொகையை திருப்பித் தர உத்தரவிட்டும், அதில் சிறு பகுதித் தொகையை மட்டும் வழங்கிய ரிலையன்ஸ் நிறுவனம், மீதிதொகையைக் கொடுக்காமல் இருந்திருக்கிறது.

இன்று புதன்கிழமை இவ்வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடைய அனில் அம்பானி உள்ளிட்ட மூன்று பேரை குற்றவாளிகள் என அறிவித்தது.