Home Photo News தமிழ்ப்பள்ளிகளில் தாய்மொழி நாள் – விமரிசையானக் கொண்டாட்டங்கள்

தமிழ்ப்பள்ளிகளில் தாய்மொழி நாள் – விமரிசையானக் கொண்டாட்டங்கள்

3496
0
SHARE
Ad
பாகான் செராய் தமிழ்ப் பள்ளி, பேராக்

ஈப்போ – பிப்ரவரி 21ஆம் நாள் அனைத்துலகத் தாய்மொழி நாளாக உலக மக்களால் கொண்டாடப்படுகிறது. அவரவர் தாய்மொழியை உணர்ந்து பற்றையும் உணர்வையும் வளர்த்துக் கொள்ள தாய்மொழி நாள் வழிவகுக்கிறது எனலாம்.

அந்தவகையில் பல்வேறு அமைப்புகள் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. தமிழ்ப்பள்ளிகளும் இந்தத் தாய்மொழி நாளை முன்னிட்டு விழாக்களை நடத்தியுள்ளன.

பேராக் மாநில தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன்

மாணவர் மனங்களில் தாய்மொழி மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தி மொழிப்பற்றை விதைக்கும் நோக்கில் பல பள்ளிகளில் விழா எடுக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

குறிப்பாக பேராக் மாநிலத்தில் அதிகமான பள்ளிகளில் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் பேராக் மாநிலத்தில் முதன் முறையாக 56 பள்ளிகளில் தாய்மொழி நாள் நடந்துள்ள வேளையில் இவ்வாண்டில் 70 தமிழ்ப்பள்ளிகளில் விழா எடுக்கப்பட்டுள்ளதாகப் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் தெரிவித்தார்.

பாரிட் புந்தார் செயிண்மேரி தமிழ்ப்பள்ளி, பாகான் செராய் தமிழ்ப்பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் நடந்த தாய்மொழி நாள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.

ஈப்போ மகிழம்பூ தமிழ்ப் பள்ளியில் சான்றோர் மாறுவேடப் போட்டி

பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அந்தந்த வட்டாரத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் தமிழ் அறிஞர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.

மேலும் தமிழ் வாழ்த்து பாடல், தமிழ்மொழி வரலாறு பற்றிய காணொலி, தமிழ்ச் சான்றோர் மாறுவேடம், கவிதை படைப்பு, இலக்கிய நாடகம் போன்ற அங்கங்களுடன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ் உணர்வை ஊட்டும் சிறப்புரைகளும் இடம்பெற்றன. இவை அனைத்தும் மாணவர்களிடையே தாய்மொழிப் பற்றுணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

செயிண்ட் மேரி தமிழ்ப் பள்ளி, பாரிட் புந்தார்

தமிழ்மொழி உணர்வும் தமிழ்க் கலை, பண்பாடும், இயல் இசை நாடகமும் இணைந்து நடந்த இந்தத் தாய்மொழி நாள் விழாக்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் பண்பாட்டு உடையில் கலந்துகொண்டது மேலுமொரு சிறப்பாகும்.

“வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமான பள்ளிகளில் தாய்மொழி நாள் கொண்டாடப்பட வேண்டும். இளம் வயதிலேயே தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் தாய்மொழிப்பற்றை ஏற்படுத்த தமிழ்ப்பள்ளிகள் முன்னெடுத்திருக்கும் இந்தப் பணி பாராட்டுக்குரியது. அதற்காகத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டித்தான் ஆகவேண்டும்” என்று சுப.சற்குணன் புகழாரம் சூட்டினார்.

செயிண்ட் மேரி தமிழ்ப் பள்ளி, பாரிட் புந்தார்

பேராக் மாநிலத்தின் தமிழ்ப் பள்ளிகளில் ‘தாய்மொழி தினம்’ முன்னிட்டு நடத்தப்பட்ட தாய்மொழி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

செயிண்ட் மேரி தமிழ்ப் பள்ளி, பாரிட் புந்தார்
காஜாங் தமிழ்ப் பள்ளி, சிலாங்கூர்
சிலிம்ரிவர் தமிழ்ப் பள்ளியின் தாய்மொழி தினக் கொண்டாட்டத்தின்போது அப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள் சிறப்பு செய்யப்பட்டனர்…
முக்கிம் புண்டுட் தமிழ்ப் பள்ளி (பேராக்) மாணவர்களின் அணிவகுப்பு
ஜெண்டராட்டா பிரிவு 3 (பேராக்) தமிழ்ப் பள்ளி
செலாபா தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் விளக்கேற்றுகின்றனர்
தாய்மொழி நாள் கோலம்
செயிண்ட் மேரி தமிழ்ப் பள்ளியில் தாய்மொழி நாள் சிறப்பு டி-சட்டைகள்
ஸ்ட்ராட்மாசி பாகான் டத்தோ தமிழ்ப் பள்ளி
தைப்பிங் இந்து வாலிபர் சங்கத் தமிழ்ப் பள்ளி

சங்காட் பத்து காஜா தமிழ்ப் பள்ளியின் (பேராக்) தாய்மொழி தினக் கொண்டாட்டம்

முக்கிம் புண்டுட் தமிழ்ப் பள்ளியில் மாறுவேடப் போட்டி

பீடோர் தகான் தமிழப் பள்ளி (பேராக்) கொண்டாட்டங்கள்