Home வணிகம்/தொழில் நுட்பம் 1எம்டிபி : மேலும் 38 மில்லியன் டாலர்களை வசூலிக்கிறது அமெரிக்கா

1எம்டிபி : மேலும் 38 மில்லியன் டாலர்களை வசூலிக்கிறது அமெரிக்கா

811
0
SHARE
Ad
வாஷிங்டன் – 1எம்டிபி விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றிய அமெரிக்க அரசாங்கம், அந்த நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல்களால் பெறப்பட்ட பணத்தை மீட்பதில் தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
1எம்டிபி ஊழல் பணம் எனக் கருதப்படும் மேலும் 38 மில்லியன் அமெரிக்க டாலரைக் கைப்பற்றி மீட்டுக் கொண்டு வருவதில் தாங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 22) அமெரிக்க அரசாங்கத்தின் நீதித்துறை அறிவித்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இதுவரையில் 1எம்டிபி ஊழல் பணம் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சொத்துகளை அமெரிக்க அரசாங்கத்தின் நீதித் துறை கைப்பற்றியிருக்கிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் இந்தப் புதிய வழக்குகளின் வழி 1எம்டிபி நிதிப் பங்குகளை (bond) விநியோகித்ததன் மூலம் முறைகேடான முறையில் வாங்கப்பட்ட இலண்டன், நியூயார்க் நகர்களில் உள்ள நில சொத்துகள், மற்றும் சில நிறுவனப் பங்குகள் ஆகியவை கைப்பற்றப்படும்.