SHARE
Ad

கராக்காஸ் – அரசியல் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் வெனிசூலா மற்றும் அதன் அண்டை நாடான கொலம்பியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள எல்லப் பகுதிகளில் கலவரங்கள் வெடித்ததைத் தொடர்ந்து கொலம்பியாவுடனான தனது தூதரக உறவுகளை முறித்துக் கொள்வதாக வெனிசூலாவின் அதிபர் நிக்கோலாஸ் மடுரோ அறிவித்தார்.

வெனிசூலாவுக்கான அனைத்துலக உதவிகள் கொலம்பியாவுடனான வெனிசூலா எல்லையில் போக்குவரத்து வசதிகளைப் பெறும் நிலையில் இந்த தூதரக முறிவுக்கான அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

இதற்கிடையில், வெனிசூலாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலவரங்களில் இதுவரை 5 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 285 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

வெனிசூலாவுக்குள் வரவிருக்கும் அனைத்துலக உதவி என்பது தனது ஆட்சியைக் கவிழ்க்கும் மறைமுக முயற்சி என்றும் சாடியிருக்கும் மடுரோ, அந்த உதவிகளை எப்படியாவது நிறுத்துவேன் என சூளுரைத்துள்ளார்.