Home நாடு “90 மில்லியன் ரிங்கிட் விவகாரத்தில் விசாரணை இன்னும் முடியவில்லை!”- பிரதமர்

“90 மில்லியன் ரிங்கிட் விவகாரத்தில் விசாரணை இன்னும் முடியவில்லை!”- பிரதமர்

670
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து பாஸ் கட்சி 90 மில்லியன் ரிங்கிட் நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு போதிய அவகாசம் தரப்பட வேண்டும் என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார். இந்த வழக்கு குறித்து ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்காமல் இருக்கலாம் என பிரதமர் கூறினார்.

மேலும், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, விசாரிக்க ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை), இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து நடத்தப்பட்ட விசாரணைகள் அடிப்படையில், பாஸ் கட்சி அந்நிதியைப் பெறவில்லை என ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.