Home உலகம் ஜய்ஷ்-இ-முகமட் பாகிஸ்தானில் இயங்கவில்லை, பாகிஸ்தான் இராணுவம் மறுப்பு!

ஜய்ஷ்-இ-முகமட் பாகிஸ்தானில் இயங்கவில்லை, பாகிஸ்தான் இராணுவம் மறுப்பு!

683
0
SHARE
Ad

இஸ்லாமாபாத்: இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்த ஜய்ஷ்முகமட் இயக்கம், பாகிஸ்தானிலிருந்து செயல்படவில்லை என்று பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

அந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்பதை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமட் குரேஷி கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரின் கூற்றுக்கு மாறுபட்டக் கருத்தை பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.

அந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் மற்றும் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய ஆசிப், அவ்வியக்கம் பாகிஸ்தானிலிருந்து செயல்படவில்லை என்றக் கருத்தினை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தில், வெளியுறவுத் துறை அமைச்சுக்கு எதிராக, மாறுபட்டக் கருத்தினை வெளியிட்டதால், பாகிஸ்தான் அரசின் நேர்மை மீது கேள்விகள் எழுந்துள்ளன.