Home கலை உலகம் தனுஷ்39 படப்பிடிப்பு தொடங்கியது!

தனுஷ்39 படப்பிடிப்பு தொடங்கியது!

1061
0
SHARE
Ad

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘அசுரன்’. இந்நிலையில், இவரது 39-வது திரைப்படமும் இனிதே தொடங்கியுள்ளது.

வெற்றிப் படங்களை இயக்கி வரும் இயக்குனர் வெற்றி மாறனின் இயக்கத்தில் அசுரன் திரைப்படம் உருவாகி வருகிறது. வட சென்னை திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ்வெற்றிமாறன்கூட்டணி மீண்டும் இத்திரைப்படம் வாயிலாக இணைகிறது.

இந்நிலையில், தனுஷ்39 திரைப்படம் குற்றாலத்தில் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. 

#TamilSchoolmychoice

முன்னதாக, தனுஷின் கொடி திரைப்படத்தை இயக்கிய ஆர். எஸ். துரை செந்தில்குமார் இப்படத்தையும் இயக்க உள்ளார். கொடி திரைப்படம் நடிகை திரிஷா மற்றும் தனுஷுக்கு பெறும் வெற்றியைத் தேடித் தந்தது. சத்திய ஜோதி தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, நடிகை சினேகா தனுஷுடன் இணைந்து இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.