Home நாடு “ஜாகிர் நாயக்கின் கைது எப்போது? சமூகப் பக்கங்களில் மக்கள் காட்டம்!”

“ஜாகிர் நாயக்கின் கைது எப்போது? சமூகப் பக்கங்களில் மக்கள் காட்டம்!”

925
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சமீபத்தில் இஸ்லாமிய மதம் மற்றும் அண்ணல் நபியை அவமதித்தக் காரணத்திற்காக ஆடவர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் சம்பந்தமாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கையாக இது அமைந்தது.

மேலும், மலாய் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையே கோபத்தை ஏற்படுத்திய சம்பவமாக இது அமைந்தது. இதனைத் தொடர்ந்து, அண்ணல் நபியை அவமதித்துப் பேசியவர்கள் மீது கடும் நடவடிக்கைக் எடுக்கக் கோரி பேரணிகளும் நடத்தப்பட்டன.  அதன் அடிப்படையில் காவல் துறை அதிரடி கைதுகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்தினர்.

இந்த விவகாரத்திற்குப் பிறகு, மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையைப் பாராட்டி வருகின்றனர். ஆயினும், இந்து மற்றும் பிற மதங்களை இழிவாக தனது பேருரைகளில் பேசிய ஜாகிர் நாயக்கை ஏன் அரசாங்கம் ஒடுக்க எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை என கேள்விகளை எழுப்பி உள்ளனர். அண்ணல் நபியை அவமதித்தவர்கள், சமூக ஊடங்களில் எழுத்துப் பதிவுகளாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை, ஆதாரமாகக் கொண்டு காவல் துறையினர் அவர்களை வலை வீசி பிடித்தது பாராட்டுக்குரியது.

#TamilSchoolmychoice

ஜாகிர் நாயக் பல்வேறு நிகழ்ச்சிகளில் பொது உரையாடல் நிகழ்ச்சிகளின் போது இந்து மதத்தினை குறிப்பாக குறி வைத்து, முஸ்லிம் மக்களை மகிழ்விக்கும் எண்ணத்தில் நிகழ்த்திய உரைகளின் காணொளிகள் ஏராளமாக இருக்கையில், ஏன் அவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் சமூகப் பக்கங்களில் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.

அவருடைய செய்கையை ஆதரித்துப் பேசும், மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு, ஒருவேளை இந்து மதத்தைச் சார்ந்த ஒருவர் இஸ்லாமிய மதத்தின் கூறுகளை இந்து நிகழ்ச்சி ஒன்றில் உரை நிகழ்த்தினால் சரியானதாக இருக்குமா என வினவி உள்ளனர்.

அரசாங்கம் மற்றும் காவல் துறையினரின் தற்போதைய நடவடிக்கை ஏற்க கூடியது எனவும், பிற மதங்களை இழிவுப் படுத்துபவர்களுக்கு எதிராக தொடுக்கப்படும் சரியான நடவடிக்கை எனவும் ஒரு சிலர் கருத்துரைத்துள்ளனர். இது, அனைத்து இன மக்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். அரசாங்கமும், காவல் துறையினரும், இது போன்ற விவகாரங்களில் ஒது தலைபட்சமாக செயல்படாமல், அனைத்து மக்களின் உணர்வுகளையும் புரிந்து செயல்பட வேண்டும் என மக்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

முஸ்லிம் அல்லாதவர்களின் குரலை தற்போதைய அரசும், காவல் துறையும் செவிமடுக்குமா? அல்லது முன்பு சொன்னது போல ஜாகிர் நாயக்கை பிற மதங்கள் குறித்து பேசுவதிலிருந்து தடை செய்யப்பட்டதைக் காரணமாக குறிப்பிட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.