Home நாடு மக்களின் உணர்வை பொறுத்து, திட்டங்களும், கொள்கைகளும் தீட்டப்பட வேண்டும்!- மாமன்னர்

மக்களின் உணர்வை பொறுத்து, திட்டங்களும், கொள்கைகளும் தீட்டப்பட வேண்டும்!- மாமன்னர்

1172
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்நாட்டு தலைவர்கள் மக்களுக்காக கொள்கைகள் மற்றும் திட்டங்களை வரையும் போது மக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என மாமன்னர் சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

இது குறித்துப் பேசிய மாமன்னர், மக்களின் ஆசைகள் மற்றும் கருத்துகளை கேட்கும் ஒரு பொறுப்பான அரசாங்கத்தைதான் மக்கள் விரும்புகின்றனர் என்றார்.

இன்றைய மக்கள் நாட்டின் வளர்ச்சியை மட்டும் பார்க்கவில்லை. ஒரு நாட்டினை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்குண்டான கூறுகளாக அமையும், ஒரு வெளிப்படையான, பொறுப்பான, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படக் கூடிய அரசாங்கத்தை எதிர்பார்க்கின்றனர்என்று சுல்தான் அப்துல்லா கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், ஊழல் போன்ற விவகாரங்கள் மக்களுக்கு சுமையாகவும், நாட்டின் நற்பெயரை கெடுக்கும் நடவடிக்கைகளாகவும் இருப்பதால், அதனை முழுமையாக துடைத்தொழிக்க வேண்டும் என மாமன்னர் கேட்டுக் கொண்டார். தேசிய ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு பாதகத்தை உண்டு பண்ணுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மாமன்னர் கூறினார்.

இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மலேசியரும், இஸ்லாமிய மதத்தின் நிலைப்பாட்டை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் என மாமன்னர் வலியுறுத்தினார்.