Home நாடு இந்திய ஆய்வியல் துறையின் ‘பன்னோக்குப் பார்வையில் தமிழ் மொழியும் இலக்கியமும்”

இந்திய ஆய்வியல் துறையின் ‘பன்னோக்குப் பார்வையில் தமிழ் மொழியும் இலக்கியமும்”

1326
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் மே மாதம் 4-ஆம் தேதி,  சனிக்கிழமை – மலாயாப் பல்கலைக்கழகத்தில் “பன்னோக்குப் பார்வையில் தமிழ் மொழியும் இலக்கியமும்” என்ற பொருண்மையில் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை இந்த ஆய்வுக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது என கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரும், இணைப் பேராசிரியருமான முனைவர் எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து 50 பேராளர்கள் ஆய்வுக்கட்டுரைகள் படைக்கவுள்ளனர். கட்டுரைகள் தமிழிலோ ஆங்கிலத்திலோ அமையலாம். மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை அனைவரையும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைக்கின்றது என குமரன் அழைப்பு விடுத்துள்ளார்.