Home உலகம் பிரெக்சிட் : பிரிட்டனின் சிக்கல் தொடர்கிறது

பிரெக்சிட் : பிரிட்டனின் சிக்கல் தொடர்கிறது

700
0
SHARE
Ad

இலண்டன் – நேற்று புதன்கிழமை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் வரைதிட்டம் எதுவும் இல்லாம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என முன்மொழியப்பட்ட தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்தனர்.

இந்தத் தீர்மானத்தை 308 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்த வேளையில், வரைதிட்டம் எதுவும் இல்லாமல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறக் கூடாது என 312 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மீண்டும் நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான காலக் கெடுவை நீட்டிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர்.

#TamilSchoolmychoice

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான காலக் கெடு எதிர்வரும் மார்ச் 29-ஆம் தேதியோடு முடிவடைகிறது.

கால நீட்டிப்பை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் மார்ச் 29-ஆம் தேதியோடு எந்தவித வரைதிட்டமும் இல்லாமல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும்.