Home நாடு நியூசிலாந்து தாக்குதலுக்குப் பிறகு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன!

நியூசிலாந்து தாக்குதலுக்குப் பிறகு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன!

724
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த வெள்ளியன்று நியூசிலாந்தில் இரு பள்ளிவாசல்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்குப் பிறகு, நாடு முழுவதிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக காவல் துறைத் தலைவர் முகமட் புசி ஹருண் கூறினார்.

அனைத்து கோவில்கள் மற்றும் தேவாலயங்களிலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். எந்த ஒரு பலிவாங்கும் செயல் நடந்திராமல் இருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சமீபத்தில், சபாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படும் 12 பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த கைதுக்குப் பின்னர், அபு சயாப் மற்றும் மவுட்டே அமைப்பு இந்நாட்டில் செயல்படுகிறதா என்பதனை காவல் துறை கண்காணித்து வரும் என புசி கூறினார்.