Home வணிகம்/தொழில் நுட்பம் கிராப் : இரத்து செய்தால் அபராதம் – பயனர்கள் கொந்தளிப்பு

கிராப் : இரத்து செய்தால் அபராதம் – பயனர்கள் கொந்தளிப்பு

905
0
SHARE
Ad

கோலாலம்பூர் – குறுஞ்செயலி வழி வாடகைக் காரை அமர்த்து நடைமுறையைப் பின்பற்றும் கிராப் வாடகைக் கார் நிறுவனம், மார்ச் 25-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தவிருக்கும் விதிகள் பயனர்களிடையே கடும் கண்டனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

கிராப் காரை வாடகைக்கு அமர்த்தி பயணத்துக்குரிய ஓட்டுநர் கிடைத்த பின்னர் 5 நிமிடங்கள் கழித்து அந்தப் பயணத்தை இரத்து செய்யும் பயனர்களுக்கு 3 ரிங்கிட் முதல் 5 ரிங்கிட் வரை கட்டணம் விதிக்கப்படும் என்பதுதான் கிராப் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் அந்தப் புதிய விதி.

“இதே போல நாங்கள் கிராப் காரை வாடகைக்கு அமர்த்திய பின்னர் சில சமயங்களில் கார் ஓட்டுநரே பயணத்தை இரத்து செய்கிறார். அவ்வாறு செய்தால் கிராப் நிறுவனம் எங்களுக்கு இதே போல 5 ரிங்கிட் கட்டணத்தை வழங்குமா?” எனவும் பயனர்கள் சமூக ஊடகங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

#TamilSchoolmychoice

யுபெர் நிறுவனத்தைக் கையகப்படுத்தி இணைத்துக் கொண்ட பின்னர், தற்போது கிராப் குறுஞ்செயலி மூலம் வாடகைக் கார் அமர்த்தும் வணிகத்தில் மலேசியாவின் முன்னணி நிறுவனமாக கிராப் திகழ்கிறது.