Home Video ஐரா: இரட்டை வேடம் தரித்து, திகிலூட்டும் நயன்தாரா!

ஐரா: இரட்டை வேடம் தரித்து, திகிலூட்டும் நயன்தாரா!

820
0
SHARE
Ad

சென்னை: தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக நயன்தாரா திகழ்கிறார். ‘லேடி சூப்பர் ஸ்டார்எனும் அடைமொழிப் பெயரால் அழைக்கப்படும் இவர், தற்போது முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து வெளிவர இருக்கும் படம்ஐரா’.

நல்ல கதையம்சங்களைக் கொண்டிருக்கும் படங்களை மட்டும் தற்போது தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாராவிற்கு பட வாய்ப்புகள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது.

ஐரா படத்தின் இயக்குனர், கே.எம்.சர்ஜூன் கூறுகையில், ஐரா என்பது யானையைக் குறிக்கும் சொல்லென்றும், இத்திரைப்படம் ஓர் எதார்த்த திகில் படமாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுக்கடுக்காக சிறப்பானக் கதைகளில் தன் நடிப்பினை வெளிக்கொணரும் நயன்தாராவிற்கு இத்திரைப்படம் மற்றுமொரு மைல் கல்லாக அமையும் என அவர் குறிப்பிட்டார். 

#TamilSchoolmychoice

இத்திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து, யோகி பாபு மற்றும் ஜெயபிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியிருக்கிறார்.

ஐரா படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று புதன்கிழமை வெளியானது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அக்காணொளியைக் காணலாம்: