Home நாடு “மகாதீரின் குணம் மாறவே இல்லை, பிகேஆர் கட்சிக்கும், மக்களுக்கும் இழைத்த துரோகம்!”- நூருல் இசா

“மகாதீரின் குணம் மாறவே இல்லை, பிகேஆர் கட்சிக்கும், மக்களுக்கும் இழைத்த துரோகம்!”- நூருல் இசா

2580
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சமீபத்திய அரசியல் சூழ்நிலைகளைப் பார்க்கும் போது, தாம் மனம் உடைந்துப் போயிருப்பதாக, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா தெரிவித்துள்ளார். மேலும், இந்த தவணையோடு தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு அரசாங்கத்திற்கு மரியாதை கொடுத்தும், நிலைமையை மேலும் மோசமாக்குவதை விரும்பாததால் ஏமாற்றத்தோடு, தாம் இந்த முடிவினை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நம்பிக்கைக் கூட்டணிக்குள், முன்னாள் அம்னோ உறுப்பினர்களின் சேர்க்கை தமக்கு ஏற்பட்ட மிகப் பெரிய ஏமாற்றம் என அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

ஒட்டுமொத்தமாக மலேசிய மக்களுக்கும், பிகேஆர் கட்சிக்கும் இழைக்கப்பட்ட துரோகம்” என அவர் தெரிவித்தார்.

நடுத்தர வர்க்கத்தை வலுப்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. அவர்களின் மிதமான நிலைகளை உயர்த்துவதற்கு நாங்கள் முயற்சி எடுக்கவில்லைஎன்று அவர் கூறினார்.

மேலும், தம் தந்தையின் முக்கிய எதிரியுடன் இணைந்து செயல்படுவதென்பது மிகுந்த சவாலைத் தருகிறது எனவும் இசா தெரிவித்தார்.

நாட்டை சேதப்படுத்திய ஒரு முன்னாள் சர்வாதிகாரிடன் பணிபுரிவதும், அவரால் எங்கள் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களும், அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியதல்ல” என இசா தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர், நாடாளுமன்ற பொதுக் கணக்காய்வாளர் குழுவிலிருந்து (பிஏசி) விலகுவதாக இசா தெரிவித்திருந்தார்.

தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான ரோனால்ட் கியாண்டியை, பிஏசி தலைவர் பதவிலேயே நிலைக்கச் செய்த பிரதமரின் முடிவிற்குப் பிறகு, நூருல் இசா இந்த முடிவினை எடுத்துள்ளார். கியாண்டி தற்போது நம்பிக்கைக் கூட்டணியில் இணைந்திருந்தாலும், நம்பிக்கைக் கூட்டணியின் கொள்கைக்கு எதிராக இந்த முடிவு இருப்பதைக் காட்டுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இசா அறிவித்தார்.

மேலும், அனைத்து விதமான அரசாங்கப் பதவிகளிலிருந்தும் தாம் விலகிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.