Home நாடு பிஏசி குழுவிலிருந்து தேமு, பாஸ் உறுப்பினர்கள் விலகல்!

பிஏசி குழுவிலிருந்து தேமு, பாஸ் உறுப்பினர்கள் விலகல்!

1090
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் ரொனால்டு கியாண்டியை நாடாளுமன்ற பொது கணக்காய்வுக் குழுவில் தலைவராக தக்கவைத்து கொள்ளும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, உடனடியாக அக்குழுவிலிருந்து மூன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று திங்கட்கிழமை விலகினர்.   

டாக்டர் நொராய்னி அகமட், டத்தோஶ்ரீ அகமட் ஹாம்சா மற்றும் டத்தோ தாகியுடின் ஹசான் ஆகியோர் அக்குழுவிலிருந்து உடனடியாக விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் டாத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

திர்க்கட்சித் தலைவரை பொதுக் கணக்காய்வு குழுத் தலைவராக நியமிப்போம் என்ற நம்பிக்கைக் கூட்டணி வாக்குறுதிக்கு மாறாக, பெர்சாத்து கட்சிக்கு மாறிய அம்னோவின் ரொனால்ட் கியாண்டி தொடர்ந்து நாடாளுமன்ற பொதுக் கணக்காய்வுக் குழுத் தலைவராக நீடிப்பது இந்த முடிவிற்கு வித்திட்டது என சப்ரி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த மார்ச் 1-ஆம் தேதி, தேசிய முன்னணி சார்பில் டாக்டர் நொராய்னியை, பிஏசி தலைவராக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது என சப்ரி குறிப்பிட்டார்.

பொருத்தமான வேட்பாளரை அடையாளம் காணும் வரை கியாண்டியே அந்த பதவியில் நீடித்திருப்பார் என பிரதமர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.