Home உலகம் 40,000 தமிழர்களை கொன்றதாகக் கூறப்படும் இலங்கையின் மீது விசாரணை நடத்தப்படும்!

40,000 தமிழர்களை கொன்றதாகக் கூறப்படும் இலங்கையின் மீது விசாரணை நடத்தப்படும்!

857
0
SHARE
Ad

சிட்னி: இலங்கையில் உள்நாட்டு போரின் போது, கடுமையான மனித உரிமைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப் பாதுகாப்பு படையினரை கண்டிப்பாக விசாரித்தே ஆக வேண்டும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை இராணுவப் படையினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா இராணுவம், திடீரென இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு போர் முடிந்து பத்து வருடக் காலங்கள் ஆகி விட்ட நிலையில், இலங்கை இராணுவத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அப்படியே நிலுவையில் உள்ளதை இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதர் ஜான் பிலிப் தெரிவித்தார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் முடிவுக்கு வந்த 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் தமிழர்களுக்கான தனிநாடுக் கோரிய விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்டது. இப்போரில் கடுமையான மனித மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், போரின் இறுதி மாதங்களில் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. வல்லுனர்களின் அறிக்கை அம்பலப்படுத்தியது.