Home உலகம் கொழும்பு தாக்குதல்கள்: 13 பேர் கைது, பலி எண்ணிக்கை 290-ஆக உயர்வு!

கொழும்பு தாக்குதல்கள்: 13 பேர் கைது, பலி எண்ணிக்கை 290-ஆக உயர்வு!

888
0
SHARE
Ad

கொழும்பு: நேற்று ஞாயிறன்று இலங்கையில் நடந்த பல்வேறு தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், இது சம்பந்தமாக இலங்கை காவல் துறையினர் 13 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் சின் ஜுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்புவில் கைது செய்யப்பட்ட இவர்களில், பத்து பேரை இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையிடம் காவல் துறை ஒப்படைத்துள்ளதாக உள்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்ததாக சின் ஜுவா குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும், இது சம்பந்தமாக மேலும் தேடுதல் வேட்டைகள் தொடரும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்தச் சம்பவத்தில் 290 பேர் உயிர் இழந்ததுடன், மேலும் 500 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனா சிறப்பு ஆணைக்குழு ஒன்றினை நியமித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது, தேவாலயங்களில் கூடியிருந்த தருணத்தில் இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. மேலும், தங்கும் விடுதிகளிலும் இந்த தொடர் வெடிப்புகள் நடந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கான காரணங்களை இலங்கை அரசாங்கமும் இன்னும் வெளியிடாத நிலையில், எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இதுவரையில் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையில் இலங்கை முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.