Home நாடு எவரெஸ்ட் மலையேறும் மலேசியக் குழுவை வேதமூர்த்தி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்

எவரெஸ்ட் மலையேறும் மலேசியக் குழுவை வேதமூர்த்தி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்

669
0
SHARE
Ad

புத்ராஜெயா – மலேசியத் திருநாட்டின் பெருமையை எவரெஸ்ட் சிகரத்தில் நாட்டும்படி மலையேற்றக் குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வழி அனுப்பி வைத்தார்.

‘டிரீம்ஸ்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த எண்மர் கொண்ட குழுவினர், ஏப்ரல் 26-ஆம் நாள் இமயமலை அடிவாரத்தில் இருக்கும் நாடான நேப்பாளத்திற்கு பயணமான பொழுது, அவர்களை வழி அனுப்பிய தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன். வேதமுர்த்தி, “எவரெஸ்ட் சிகரத்தின் முகட்டைத் தொடும் முயற்சியில் வெற்றி பெற்று, நாட்டிற்கும் பெருமை சேருங்கள். உங்களின் இந்த உன்னத முயற்சிக்கு மலேசிய மக்கள் மானசீக ஆதரவு தெரிவிப்பார்கள்” என்றும் வாழ்த்தினார்.

“பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் இந்த அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  இப்படிப்பட்டவர்கள், வாழ்வில் சாதனை படைக்க முயற்சி செய்வது ஒருபுறம் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்திற்கும் மன வலிமைக்கும் அவர்கள் முன்னுரிமை கொடுப்பதால், வளமான வாழ்வு இவரைப் போன்றவர்களுக்கு வசமாகும். 17 நாட்கள் அவர்கள் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தில் வெற்றிக் குறிக்கோள் ஒருபுறம் இருந்தாலும், பாதுகாப்பிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்தும் அளித்து முயற்சியில் வெற்றி பெற்று நாட்டிற்கு பாதுகாப்புடன் திரும்புங்கள்” என அந்தக் குழுவின் எண்மரையும் கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 26-ஆம் தேதி சிப்பாங் பன்னாட்டு விமான நிலையத்தில் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் வேதமூர்த்தி.

#TamilSchoolmychoice