Home நாடு அரசாங்க ஊழியர்கள் தற்கால அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்!- பிரதமர்

அரசாங்க ஊழியர்கள் தற்கால அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்!- பிரதமர்

515
0
SHARE
Ad

புத்ராஜெயா: அரசு ஊழியர்கள் தங்களுக்கென்ற சொந்த அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கலாம் என்றாலும், அவர்கள் தங்கள் வேலையில் நடுநிலையாக இருக்க வேண்டும் எனவும், நாட்டின் நிர்வாகத்தை சீராக இயக்கும் பட்சத்தில் தற்கால அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் மகாதீர் முகமட் இன்று செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டார்.

தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர், ஆகவே அதற்கு மதிப்பு அளிக்கும் வகையில் அவர்கள் நடந்து கொள்ளவேண்டும் எனவும் கூறினார்.

குறிப்பிட்ட ஓர் அரசாங்கத்திற்கு 61 ஆண்டுகளாக பணியாற்றிய பின்பு, வேறொரு புதிய அரசாங்கம் பதவி ஏற்றதும் , அதன் கீழ் பணி புரிவது கடினமானதாக இருந்தாலும், புதிய அரசாங்கம் நாட்டை மிகவும் நியாயமான முறையில் வழிநடத்துவதை உறுதிபடுத்திவதில் அவர்களின் பங்கு இடம் பெறலாம் என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அரசாங்க அதிகாரிகள் மத்தியில் பிளவுப்பட்ட விசுவாசம் இருந்தால் நாட்டினை நன்முறையில் நிர்வகிக்க முடியாது என அவர் கூறினார்.