Home இந்தியா தீவிரப்புயலாக வலுப்பெறும் பானி புயல்!

தீவிரப்புயலாக வலுப்பெறும் பானி புயல்!

949
0
SHARE
Ad

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள பானி புயல் தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும், இன்று செவ்வாய்க்கிழமை காலையில், சென்னைக்கு தென்கிழக்கே 690 கிமீ தொலைவில் பானி புயல் மையம் கொண்டுள்ளது.

16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல், அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரப்புயலாக மாறி நாளை புதன்கிழமை மாலை வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடற்பகுதியை நெருங்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

பானி புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும் என்பதால், வட தமிழகத்தில்  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் வடதமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் இன்று 60 முதல் 70 கிலோ மீட்டர் வரையிலுமான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.