Home நாடு “நாட்டின் பொருளாதாரத்தை உடனே மீட்பதற்கு நாங்கள் மந்திரவாதிகள் அல்ல!”- குவான் எங்

“நாட்டின் பொருளாதாரத்தை உடனே மீட்பதற்கு நாங்கள் மந்திரவாதிகள் அல்ல!”- குவான் எங்

610
0
SHARE
Ad

சண்டாக்கான்: முந்தைய அரசாங்கத்தால் விட்டுச்செல்லப்பட்ட மிகப் பெரிய கடன்களின் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தை உடனே மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம்மந்திரவாதிஅல்ல என நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.

நம்பிக்கைக் கூட்டணி தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை திட்டமிட்டு மீட்டெடுக்க நேரம் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

நேற்றிரவு வியாழக்கிழமை சண்டாக்கானில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய லிம் இவ்வாறு கருத்துரைத்தார்.

#TamilSchoolmychoice

ஜசெக கட்சி வேட்பாளரான விவியன் வோங் மற்றும் ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் ஆகியோர் இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஜசெக கட்சியின் தலைமைச் செயலாளருமான லிம் கூறுகையில், கடந்த கால ஆட்சியில் நாடு முழுமையாக சூரையாடப்பட்டுவிட்டதாகவும், 1எம்டிபி திட்டம் உட்பட மொத்தமாக 150 பில்லியன் ரிங்கிட் கடனை நாடு சுமந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான கடன்களை மீறியும் மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் ஒருபோதும் பின் வாங்கியதில்லை என லிம் கூறினார்.

இதற்கிடையில், ஐக்கிய சபா கட்சி தனது பிரச்சாரத்தின் போது, தனிப்பட்ட தாக்குதலை நடத்தியதை லிம் சுட்டிக் காட்டினார். இவ்வாறான குணம் கொண்ட கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.