Home நாடு காவல் அதிகாரிகளை பழி வாங்கும் எண்ணத்தில் ஐபிசிஎம்சி அமைக்கப்படாது!

காவல் அதிகாரிகளை பழி வாங்கும் எண்ணத்தில் ஐபிசிஎம்சி அமைக்கப்படாது!

906
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (ஐபிசிஎம்சி) காவல் துறையினரை தண்டிக்கும் எண்ணத்தில் அமைக்கப்படப் போவதில்லை என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்த ஆணையம் நிறுவப்பட்டப் பிறகு காவல் அதிகாரிகள் குறி வைக்கப்படுவர் எனும் தவறான கண்ணோட்டத்தை அவர் மறுத்தார்.

இந்த விவகாரம் குறித்து ஆட்சி முறை, நேர்மை மற்றும் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பின் தலைவர் டான்ஶ்ரீ அபு காசிம் முகமட்டிடமிருந்து ஒத்துழைப்புக் கோரியுள்ளதாக கூறியுள்ளார். காவல் துறையினருக்கு ஐபிசிஎம்சி குறித்த தெளிவான விளக்கங்களைக் கொடுப்பதற்கு அவர்களுடனான ஓர் அமர்வு ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்று வியாழக்கிழமை ஐபிசிஎம்சி விவகாரம் குறித்து இன்று வெள்ளிக்கிழமை பதவி ஓய்வுப் பெற இருக்கும் காவல் துறைத் தலைவர் முகமட் புசி ஹருண் பிரதமர் மகாதீரை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் போது, ஐபிசிஎம்சி அமைப்பின் ஒரு சில கூறுகளுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.