Home இந்தியா கன்னியாகுமரியில் 45,000 வாக்காளர்கள் நீக்கம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்!- உயர்நீதிமன்றம்

கன்னியாகுமரியில் 45,000 வாக்காளர்கள் நீக்கம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்!- உயர்நீதிமன்றம்

582
0
SHARE
Ad

சென்னை: இந்திய நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றதுஅப்போது, கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து 45,000 பேர் நீக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் இருந்து கடலோர கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் நீக்கப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்

#TamilSchoolmychoice

குறிப்பாக கன்னியாகுமரி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மையினர் அதிகமாக நீக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ் மீனவர் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று மனு ஒன்றை அனுப்பியுள்ளது