Home இந்தியா விடுதலைப் புலிகள்: தமிழகத்தில் மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை!

விடுதலைப் புலிகள்: தமிழகத்தில் மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை!

732
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இலங்கை தமிழர்கள் மீதான அடக்குமுறையையும், அவர்கள் மீதான வன்முறையையும் எதிர்த்து போராடும் பொருட்டு உருவாக்கப்பட்ட அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு. விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கையில் நடைபெற்ற போரில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை தமிழர்களின் உரிமையை பெற்றுத் தரும் பொருட்டு உருவான இந்த இயக்கம், பல்வேறு நாடுகளில் தீவிரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

எனினும், இந்த அமைப்பால் ஆபத்து என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால், பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டது. ஆயினும், தொடர்ந்து இந்தியாவில் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால், விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை உத்தரவு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு  நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.