Home இந்தியா இந்தியா: தேர்தல் இறுதி முடிவுகள் மே 24-ஆம் தேதி வெளிவரலாம்!

இந்தியா: தேர்தல் இறுதி முடிவுகள் மே 24-ஆம் தேதி வெளிவரலாம்!

594
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தல் இறுதி முடிவுகள் வருகிற மே 23-ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், இம்முறை அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவிர்க்க முடியாத காரணங்களால் மே 24-ஆம் தேதி வெளிவருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகின்றன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தி தேர்தல் நடைபெற்று வரும் அதில் முறைகேடுகள் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டு அவை மொத்தமாக உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

இதன் முடிவில் மக்களவை தேர்தலின் போது தொகுதி ஒன்றுக்கு ஒரேயொரு விவிபாட் எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு பதிலாக சட்டமன்றம் வாரியாக ஒவ்வொரு விவிபாட் எந்திரங்களை சரிபார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது

இதையடுத்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ஆம் தேதியன்று விவிபாட் எந்திரங்கள் எண்ணப்படவுள்ளன. இதற்கு இந்திய துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜெய்ன் பொறுப்பாளராக உள்ளார். ஒரு விவிபாட் எந்திரத்தில் பதிவான வாக்குகளை சரிபார்ப்பதற்கு சராசரியாக ஒரு மணிநேரம் தேவைப்படும்.

தற்போது கூடுதலாக 4 எந்திரங்களை சரிபார்க்க வேண்டியுள்ளதால், இதற்கு கூடுதலாக 4 மணி நேரம் ஆகும் என கூறப்படுகிறது. எனவே மக்களவை தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி மாலை அல்லது மே 24-ஆம் தேதி காலையில்தான் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.