Home நாடு வேலைக்கு சீன மொழி தேவை என்றால், மெட்ரிகுலேஷனில் பூமிபுத்ராக்களின் எண்ணிக்கையும் குறையாது!

வேலைக்கு சீன மொழி தேவை என்றால், மெட்ரிகுலேஷனில் பூமிபுத்ராக்களின் எண்ணிக்கையும் குறையாது!

840
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் நுழைவதற்கு மட்டும் இன அடிப்படையிலான அம்சத்தை மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் நேற்று வியாழக்கிழமை யூஎஸ்எம் மாணவர்களுடனான சந்திப்பில் கூறினார். மாறாக, வேலை அமர்வுகளின் போது கண்டிப்பாக சீன மொழி தெரிந்திருக்க வேண்டும் எனும் அம்சத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இம்மாதிரியான கட்டுபாடுகளினால் நிறைய பூமிபுத்ரா மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள் என்று அவர் கருத்துரைத்தார்.

சுலபமான முறையில் ஒருவர் கல்வி வாய்ப்பினை பெறுவதற்கு மட்டுமல்ல, வசதி இல்லாதவர்களுக்கும் பயனளிக்கும் வண்ணம் மெட்ரிகுலேஷன் அறிமுகப்படுத்தப்பட்டது” என அமைச்சர் கூறினார்.

#TamilSchoolmychoice

அப்படி ஒரு வேளை மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் இன பாகுபாடு பார்க்கக் கூடாதென்றால், வேலை அமர்வுகளில் சீன மொழியையும் ஒரு கட்டாயமான விதியாக வைப்பதை அகற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.