Home நாடு சுங்கை அரா தமிழ்ப்பள்ளியை பிற பள்ளிகள் மாதிரியாகக் கொள்ள வேண்டும்!- மஸ்லீ

சுங்கை அரா தமிழ்ப்பள்ளியை பிற பள்ளிகள் மாதிரியாகக் கொள்ள வேண்டும்!- மஸ்லீ

620
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

ஜோர்ஜ் டவுன்: தேசிய வகை சுங்கை அரா தமிழ்ப்பள்ளிக்கு வருகைப் புரிந்த கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், அப்பள்ளி சுற்றுச்சூழலை நன்முறையில் பராமரித்து வருவதைக் கண்டு வியந்ததாகக் கூறியுள்ளார்.

தங்களின் குழந்தைகள் பள்ளி முடிந்து வீடு திரும்ப மறுப்பதாகவும், பள்ளியில் இருந்து படிப்பதையே விரும்புவதாகவும் பெற்றோர்கள் கூறியதைக் கேட்டு தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இப்பள்ளிக்கூடத்தின் அருகில் ஓர் இஸ்லாமியப் பள்ளி இருந்தாலும், இவ்விரு பள்ளிகளும் அடிக்கடி கூட்டு நடவடிக்கைகளை நடத்தி வருவதாகவும் மஸ்லீ தெரிவித்தார்.

ஐநாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் எட்டு இலக்குகளை இப்பள்ளி அடைந்துள்ளது. மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி கற்றலை ஆர்வமிக்கதாக்கி உள்ளது” என அமைச்சர் கூறினார்.

#TamilSchoolmychoice

இப்பள்ளியின் தலைமையாசிரியர் சங்கா சின்னையா மற்றும் 20 ஆசிரியர்களைப் பாராட்டிய அமைச்சர், பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சூழலை பராமரிக்கும் முயற்சிகளுக்காக 20,000 ரிங்கிட் மானியத்தை வழங்கினார். மேலும், டேவான் பாஹாசா டான் புஸ்தாகா 4,000 ரிங்கிட் பெறுமானமுள்ள நூல்களை பள்ளியின் நூல் நிலையத்திற்கு வழங்கியது.