Home நாடு அன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்!

அன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்!

805
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் விரைவாக உயர்ந்து வரும் பிரச்சனைகள் குறித்து தாம் பிரதமர் மகாதீரை இன்று திங்கட்கிழமை சந்திக்க உள்ளதாக பிகேஆர் கட்சித் தலைவரும், போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஈரானின் தலைமைக்கு அமெரிக்கா அச்சுறுத்தலாக அமைவது குறித்து பேசப்பட உள்ளது. இஸ்லாமிய நாடுகளை தற்காக்கும் முயற்சியில் அரசாங்கம் தனது நிலைபாட்டை வெளிபடுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, ஈரான் பதற்றம் காரணமாக 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை சவுதிக்கு விற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அண்மையில் அனுமதி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 1500 படை வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கூறி உள்ளார்போர் விமானங்கள்ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற பாதுகாப்பு ஆயுதங்கள் அனுப்பப்படும் எனவும் அவர் கூறி உள்ளார்.

#TamilSchoolmychoice

ஆனால்இவை குறைந்த அளவிலான படைகளே என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது. எண்ணெய் கப்பலை தாக்கியதாக அமெரிக்கா உயரதிகாரிகள் நேரடியாக ஈரானை குற்றஞ்சாட்டி வருகிறார்கள்மர்மமான குண்டுகள் வெடித்ததில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் சேதமாகின.