Home கலை உலகம் ஜூன் 23-ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும்!

ஜூன் 23-ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும்!

158
0
SHARE

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 23-ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க பொருப்பாளர்களுக்கான பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், நடிகர் சங்க கட்டிடப் பணிகளை காரணம் காட்டி விஷால், நாசர் தலைமையிலான கூட்டணி தேர்தலை நடத்தாமல் இருந்தது. இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டார்

அதன்படி, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று நீதிபதி பத்மநாபன் அறிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், நாசர் தலைமையிலான கூட்டணி மீண்டும் அதே நபர்களுடன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலாளார் பதவிக்கு விஷால், பொருளாளார் பதவிக்கு கார்த்தி என பழைய கூட்டணி மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments