Home வணிகம்/தொழில் நுட்பம் பூட்பிரிண்ட் கூட்டணி: மீண்டும் உலகைக் காக்கும் முயற்சியில் அயர்ன் மேன்!

பூட்பிரிண்ட் கூட்டணி: மீண்டும் உலகைக் காக்கும் முயற்சியில் அயர்ன் மேன்!

557
0
SHARE
Ad

வாஷிங்டன்: பூட்பிரிண்ட் கூட்டணி‘ (Footprint Coalition) என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு, இயந்திரனியல், நானோ தொழில்நுட்பம் என அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி உலகத்தை சுத்தம் செய்யும் செயல் திட்டத்தை ராபர்ட் டவ்னி ஜூனியர் அறிமுக படுத்தியுள்ளார்.  ராபர்ட் டவ்னி ஜூனியர், அயர்ன் மேன் படத்தில் உலகை காக்கும் பாத்திரத்தில் நடித்திருப்பார்.

அமேசான் நிறுவனம் முதல் முறையாக “Re:Mars” என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு, இயந்திரனியல், வின்வெளி ஆகியவற்றை மையமாக வைத்து நடத்தப்பட்ட மாநாட்டில், ராபர்ட் டவ்னி ஜூனியர் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.  இந்த தொடக்கம் 2020-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அவர் அறிவித்தார்.

கடந்த 11 வருடங்கள், மக்களுக்கு டோனி ஸ்டார்க் என்கிற அயர்ன் மேனாக அறிமுகமாகிய ராபர்ட் டவ்னி ஜூனியர், இந்த செயற்கை நுண்ணறிவு, புவியின் தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்ய உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்

#TamilSchoolmychoice

நான் ஏதாவது செய்தாக வேண்டும், ஏனென்றால் தற்போது நான் வேலையில்லாமல் இருக்கிறேன்என மார்வல் படங்களின் தொடரில் தன் கதாபாத்திரம் முடிவுக்கு வந்ததை கேலியாக கூறியுள்ளார்.