Home உலகம் கிரிக்கெட் : 106 ஓட்டங்களில் வங்காளதேசத்தைத் தோற்கடித்தது இங்கிலாந்து

கிரிக்கெட் : 106 ஓட்டங்களில் வங்காளதேசத்தைத் தோற்கடித்தது இங்கிலாந்து

501
0
SHARE

கார்டிப் (வேல்ஸ்) – உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று சனிக்கிழமை இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசக் குழுவை இங்கிலாந்து வீழ்த்தியது.

தனது முதல் பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 386 ஓட்டங்களை எடுத்தது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளில் நேற்று இங்கிலாந்து எடுத்த 386 ஓட்டங்கள்தான் இதுவரையில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாகும்.

அடுத்து பேட்டிங் செய்த வங்காள தேசம் 48.5 ஓவர்களிலேயே தனது 10 விக்கெட்டுகளை இழந்து, 280 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனைத் தொடர்ந்து 106 ஓட்டங்களில் இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் வரிசையில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதும் பரபரப்பான ஆட்டம் நடைபெறுகிறது.

Comments