Home நாடு “சட்டப்படி சரி – ஆனால் அரசியல் ரீதியாகத் தவறானது” – லத்தீஃபா கோயா நியமனம் குறித்து...

“சட்டப்படி சரி – ஆனால் அரசியல் ரீதியாகத் தவறானது” – லத்தீஃபா கோயா நியமனம் குறித்து கிட் சியாங்

816
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக லத்தீஃபா கோயா நியமிக்கப்பட்டுள்ள சர்ச்சையில் ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“லத்தீஃபாவின் நியமனம் சட்டப்படியாகவும், மலேசிய அரசியல் சாசனப்படியும் சரியானதாக இருக்கலாம். ஆனால் அரசியல் ரீதியாக அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று” என அவர் கூறியுள்ளார்.

காரணம், லத்தீஃபாவின் நியமனம் நம்பிக்கைக் கூட்டணியின் பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

“லத்தீஃபா கோயாவைத் தவிர வேறு ஒருவர் இதே போன்று ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தால், அதற்காக போர்க்கொடி தூக்கிப் போராட்டம் நடத்தும் முதல் ஆளாக இதே லத்தீஃபா கோயாதான் இருப்பார்” என்றும் லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

“சட்டப்படி லத்தீஃபாவின் நியமனம் பிரதமரின் அதிகாரத்திற்குட்பட்டு செய்யப்பட்டிருக்கிறது. லத்தீஃபாவின் தகுதி குறித்தும் யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் அவரது நியமனம் 14-வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வழங்கிய வாக்குறுதியைப் பிரதிபலிக்கவில்லை என்பதுதான் பிரச்சனை” என்றார் அவர்.
நம்பிக்கைக் கூட்டணியின் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசியல் சாசன சட்டதிருத்தங்கள் அவசியம் என்பதால், அந்த சட்டதிருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படும் என்பதால் அந்த வாக்குறுதிகளை சட்டமாக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தருவார்களா என்றும் கிட் சியாங் கேள்வி எழுப்பியிருக்கிறார்.