Home கலை உலகம் மாநாடு: மலேசியாவில் அரசியலுடன் நுழையும் சிம்பு!

மாநாடு: மலேசியாவில் அரசியலுடன் நுழையும் சிம்பு!

231
0
SHARE

சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தைத் தொடர்ந்து அவர் நடிகர் சிம்புவை வைத்து அரசியல் ரீதியிலான படம் ஒன்றை இயக்க உள்ளார். படத்திற்கு மாநாடு என பெயரிடப்பட்டுள்ளது. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிக்கிறார்.

கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார். இவர்களை தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இடம்பெறுகின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் 25-ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் தொடங்க இருக்கிறது. பாடலுடன் சில முக்கியமான காட்சிகளும் இங்கு படமாக்கப்பட உள்ளன.

முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் இந்தப்படம் உருவாகுவதாகக் கூறப்படுகிறது. மேலும், சிம்பு நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments