Home கலை உலகம் மறைந்த நகைச்சுவை நடிகர் கிரேசி மோகனின் உடல் தகனம் செய்யப்பட்டது!

மறைந்த நகைச்சுவை நடிகர் கிரேசி மோகனின் உடல் தகனம் செய்யப்பட்டது!

725
0
SHARE
Ad

சென்னை: மறைந்த நகைச்சுவை நடிகர் கிரேசி மோகனின் உடல் இன்று செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 11 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.

இயந்திர பொறியாளரான கிரேசி மோகன், படிக்கும் போது கல்லூரிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் முதல் முதலாக கிரேட் பேங்க் ராப்பரி என்ற நாடகத்தை எழுதியுள்ளார். மேலும், கல்லூரியில் அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்துள்ளார். இந்த நாடகத்திற்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த எழுத்தாளருக்கான விருதும் கமல்ஹாசன் கையால் பெற்றுள்ளார்

கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் என்ற நாடகத்தை எழுதி, அதில், நடிகர் எஸ்வி சேகர் நடித்துள்ளார். இந்த நாடகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இவர்  கிரேசி மோகன் என்றழைக்கப்பட்டார்

#TamilSchoolmychoice

இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று திங்கட்கிழமை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இஅற்கை எய்தினார். கிரேசி மோகனின் இந்த திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று திங்கட்கிழமை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.

இவ்வேளையில் பெசன்ட் நகர் மின்மயானத்தில்  கிரேசி மோகனின் உடல் தகனம் செய்யப்பட்டது.