Home கலை உலகம் தென்னிந்திய நடிகர் சங்கம்: விமல், ஆர்த்தி, ரமேஷ் கண்ணா மனுக்கள் தள்ளுபடி!

தென்னிந்திய நடிகர் சங்கம்: விமல், ஆர்த்தி, ரமேஷ் கண்ணா மனுக்கள் தள்ளுபடி!

220
0
SHARE

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் புதிய அணி போட்டியிடுகிறது

விஷாலின் பாண்டவர் அணியில் சென்ற முறை போட்டியிட்டவர்கள் அதே பதவிகளுக்கு இந்த முறையும் போட்டியிடுகின்றனர். மனுத்தாக்கல முடிந்து மனு பரிசீலனை நடந்து வந்த நிலையில் நேற்று ஐசரி கணேஷ் அணியை சேர்ந்த நடிகர் விமல்நடிகை ஆர்த்தி , நடிகர் ரமேஷ் கண்ணா ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

மனு செய்தவர்கள் அல்லது மனுவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டவர்கள் சந்தா தொகை கட்டாவிடில் அவர்களது மனு நிராகரிப்படும். அவ்வகையில்தான் இவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐசரி கணேஷ் தலைமையிலான அணிக்கு இது மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது

Comments