Home உலகம் கிரிக்கெட் : 7 விக்கெட்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளைத் தோற்கடித்தது வங்காளதேசம்

கிரிக்கெட் : 7 விக்கெட்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளைத் தோற்கடித்தது வங்காளதேசம்

896
0
SHARE

டாண்டன் (இங்கிலாந்து) – நேற்று திங்கட்கிழமை (ஜூன் 17) உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் வரிசையில் மேற்கிந்தியத் தீவுகளின் அணியோடு மோதிய வங்காளதேசம் வெற்றி வாகை சூடியது.

முதல் பாதி ஆட்டத்தில் வங்காளதேசம் பந்து வீச மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்தது. 50 ஓவர்களை நிறைவு செய்தபோது மேற்கிந்தியத் தீவுகள் 8 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை எடுத்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் 41.3 ஓவர்களிலேயே 322 ஓட்டங்களை எடுத்த வங்காளதேசம் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது.

இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.

 

Comments