Home நாடு யூதர்களை விமர்சித்த பிரதமருக்கு துருக்கிய எழுத்தாளர் கடும் எதிர்ப்பு!

யூதர்களை விமர்சித்த பிரதமருக்கு துருக்கிய எழுத்தாளர் கடும் எதிர்ப்பு!

725
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புகழ்பெற்ற துருக்கிய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான முஸ்தாபா அக்யோல், பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அண்மையில் பிரிட்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் யூதர்களுக்கு எதிரான அவதூறான கருத்துகள் குறித்து வெளியிட்டுள்ளது குறித்து விமர்சித்துள்ளார்.

அவரது செய்கையானது அவமரியாதைக்குரியது எனவும், இவ்வாறான ஒருதலைப்பட்சமாக யூதர்களை எதிர்க்கும் பேச்சுகளை கேம்பிரிட்ஜ் யூனியன் அனுமதித்ததையும் அவர் சாடியுள்ளார்.

தனக்குத் தெரிந்த யூதர்கள் அவருடைய நண்பர்கள் மட்டுமே என்றும் இதர யூதர்கள் இவர்களை போல் இல்லையென்றும் பிரதமர் கூறியது விமர்சனத்திற்கு உள்ளானது.  

#TamilSchoolmychoice

சில முஸ்லிம் அல்லாத அரசியல்வாதிகள் இதைச் சொல்வதை கற்பனை செய்து பாருங்கள். முஸ்லிம்களான நாங்கள் அதை மிகவும் அவமதிப்பதாகக் கருதுவோம்என்று அவர் பதிவிட்டுள்ளார்.

எனவே, மலேசிய பிரதமர் மகாதீர் இங்கே இதேபோன்று அவமரியாதைக்குரியவர்என்று முஸ்தாபா நேற்று செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், பிரதமர் மகாதீர், யூதர்கள் நிறைய தவறான காரியங்களைச் செய்கிறார்கள், அதனால் கருத்து தெரிவிக்க நம்மை கட்டாயப்படுத்துகிறது என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

யூத சமூகத்திற்கு எதிரான தனது கருத்துகளால் பிரதமர் மகாதீர் விமர்சனங்களை  ஏற்பது இது முதல் முறை அல்ல.