Home நாடு 1எம்டிபி சம்பந்தமான 270 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் வழக்கு அம்னோவை தகர்ப்பதற்கான செயலல்ல!- பிரதமர்

1எம்டிபி சம்பந்தமான 270 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் வழக்கு அம்னோவை தகர்ப்பதற்கான செயலல்ல!- பிரதமர்

608
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 41 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக பறிமுதல் வழக்கு தொடுக்கப்பட்டதன் வாயிலாக அம்னோ கட்சியை முழுமையாக திவாலாக்குவதற்காக அரசாங்கத்தின் முயற்சி இது என்று அக்கட்சி உறுப்பினர்கள் கூறுவதை பிரதமர் மகாதீர் முகமட் மறுத்துள்ளார்.

“அது நோக்கம் என்றால், அரசாங்கம் அதனை முன்னமே செய்திருக்க முடியும்.” என்று பிரதமர் கூறினார்.

நஜிப் தற்போது சுதந்திரமாக இருக்க நாங்கள் அனுமதிகிறோம். அவர் மீது குற்றம் சாட்டப்பட்டாலும், அவர்பாஸ்குஎன்ற அடைமொழியுடன் சுதந்திரமாக நடமாடுகிறார்” என்று கோலாலம்பூரில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஆசிய எண்ணெய் மற்றும் எரிவாயு மாநாடு திறப்பு விழாவில் நிருபர்களை சந்தித்த போது தெரிவித்தார். 

#TamilSchoolmychoice

இதனிடையே, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கணக்கிலிருந்து  41 நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் பணத்தை பறிமுதல் செய்ய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசிவழக்கு தாக்கல் செய்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.

நஜிப்பின் கணக்கிற்கும் பின்னர் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சுமார் 270 மில்லியன் 1எம்டிபி பணம் மாற்றப்பட்டதை மீட்டெடுக்க, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 56-இன் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டிருந்தது.

சில அம்னோ தலைவர்கள் இந்த நடவடிக்கையானது அம்னோ கட்சியை முழுமையாக தகர்ப்பதற்கு என்றும், ஒருவேளை அவ்வாறு நடந்துவிட்டால் புதிய அம்னோவை அமைப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

புதிய அம்னோ கட்சியை அமைப்பதில் தமக்கு எந்தவொரு எதிர்ப்புமில்லை என தெரிவித்த பிரதமர், இதற்கு முன்பு செய்த குற்றங்களுக்காக சட்டத்தின் படி தண்டிக்கப்படுவர் என்று கூறினார்.