Home இந்தியா மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்!- எடப்பாடி பழனிசாமி

மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்!- எடப்பாடி பழனிசாமி

671
0
SHARE
Ad

சென்னை: கர்நாடகாவின் மேகதாது அணை கட்டுவது குறித்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கர்நாடகாவின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிப்பதோடு, தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நீரை கர்நாடகா தரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அதற்கு தீர்வுக் காண வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு மோடி உத்தர விட வேண்டுமென்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

#TamilSchoolmychoice

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராக காவிரி விவகாரத்தில் கர்நாடகா செயல்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

மேகதாது அணை அல்லது அதனைப் போன்ற எதுவும் கர்நாடகத்தில் காவிரி ஆறு வரும் பாதையில் அமைக்கப்பட்டால், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்படும்எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

எனவே இந்த சூழல்களை கருத்தில் கொண்டு, மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு அளித்திருக்கும் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.