Home இந்தியா சுகாதாரத் துறையில் தமிழ் நாடு எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை, 9-வது நிலைக்கு இறங்கியது!

சுகாதாரத் துறையில் தமிழ் நாடு எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை, 9-வது நிலைக்கு இறங்கியது!

568
0
SHARE
Ad

சென்னை: சுகாதாரத் துறையில் சிறந்த மாநிலங்களாக விளங்கும் இந்திய மாநிலங்களில் பெயர் பட்டியல் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.    

இப்பட்டியலில் கடந்த ஆண்டு மூன்றாவது நிலையில் இருந்த தமிழ் நாடு தற்போது ஒன்பதாவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பட்டியலை நிதி ஆயோக் (NITI Aayog),  இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள குழு வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் முதலிடத்தில் கேரள மாநிலம் உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆந்திரா, மாஹாராஷ்ட்ரா, குஜராத், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் உள்ளன. இறுதி இடத்தில் உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் உள்ளன.

#TamilSchoolmychoice

இந்த பட்டியலானது 23 சுகாதார குறிகாட்டிகளின் அடிப்படையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கூட்டு நடவடிக்கையாகும். இறப்பு விழுக்காடு, மொத்த கருவுறுதல் விழுக்காடு மற்றும் பாலின விழுக்காடு போன்றவற்றுக்கு உட்பட்டு இதன் தரம் கணக்கிலிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, ஒடிசா, உத்தரகண்ட், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.