Home உலகம் அமெரிக்காவின் ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை பயனற்றவை!- ஈரான் அதிபர்

அமெரிக்காவின் ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை பயனற்றவை!- ஈரான் அதிபர்

745
0
SHARE
Ad

தெஹ்ரான்: அமெரிக்கா ஈரானிய நாட்டின் மீது விதித்துள்ள சமீபத்திய பொருளாதாரத் தடையானது, அந்நாடு உரையாடலை விரும்புவதாகக் கூறுவதை பொய் என்று மெய்பித்துள்ளது என்று ஈரான் அதிபர் ஹசான் ரூஹானி கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த திங்களன்று ஈரானின் உச்சமட்ட தலைவருக்கு எதிரான வெளியிட்ட நடவடிக்கைகள் பயனற்றவை என்று ஹசான் ரூஹானி கூறினார். மேலும், தனது வெளியுறவு அமைச்சரை குறிவைக்கும் அமெரிக்காவின் திட்டம் இது என்று கண்டித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் வெள்ளை மாளிகை மனநலம் குன்றியவை என்பதைக் குறிக்கிறது என்று ரூஹானி மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

ஈரானின் சமீபத்திய ஆக்கிரமிப்பு நடத்தைக்கு பதிலளிப்பதாக டிரம்ப் கூறியிருந்தார். கடந்த வாரம், ஈரானிய படைகள் ஹார்முஸ் ஜலசந்தியின் மீது, ஈரானிய வான்வெளியை மீறியதாகக் கூறி அமெரிக்க கண்காணிப்பு டுரோனை சுட்டு வீழ்த்தின. ஆயினும், அந்த டுரோன் அனைத்துலக கடலுக்கு மேல் பறந்ததாக அமெரிக்கா வலியுறுத்தியது.

ஈரான் இரண்டு முறை தமது ஆறு எண்ணெய் கொள்கலன்களை வெடிக்க வைத்து சேதப்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஈரான் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கு இடையிலான பதட்டங்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து உச்சத்தை அடைந்து வருகிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஈரான் மற்றும் இதர ஆறு உலக வல்லரசுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் கைவிட்டு, ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய ஈரானை கட்டாயப்படுத்தும் வகையில் பொருளாதாரத் தடைகளை மீண்டும் ஏற்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.