Home நாடு “கட்சிக்குள் போராட்டம் வேண்டாம், ஒன்றுபட்டு மக்கள் நலனுக்காக குரல் கொடுப்போம்!”- நஜிப்

“கட்சிக்குள் போராட்டம் வேண்டாம், ஒன்றுபட்டு மக்கள் நலனுக்காக குரல் கொடுப்போம்!”- நஜிப்

616
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ கட்சியில் எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் கட்சியின் தலைவராக மீண்டும் திரும்பிய அகமட் சாஹிட் ஹமீடியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அம்னோ உறுப்பினர்களை நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டார்.

சாஹிட் பணிக்கு திரும்புவதில் அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் அவர் அவரது தலைமையை முற்றிலுமாக மூன்று ஆண்டுகள் முடிக்கும் வரையிலும் காத்திருக்க வேண்டும் என்று முன்னாள் அம்னோ தலைவருமான அவர் கூறினார்.

அம்னோ உறுப்பினர்கள் அனைத்து மலேசியர்களின் நலனுக்காக ஒன்றுபட வேண்டும் என்றும், உள்கட்சி பூசல்கள் அல்லாமல் மக்களைப் பற்றிய பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது. மக்களின் ஆதரவை மீண்டும் பெற சுகாதாரம், வாழ்க்கை செலவு மற்றும் வேலை வாய்ப்புகள் போன்ற விசயங்களில் அம்னோ துணிச்சலாக கேள்விகள் எழுப்பவேண்டும்” என்று அவர் கூறினார்.

மக்கள் நம்மை நம்பட்டும். நாம் கட்சிக்குள்ளேயே போராடிக் கொண்டிருந்தால், மக்கள் நம்மை உறுதியாக நம்ப மாட்டார்கள்.” என்று நஜிப் குறிப்பிட்டார்.