Home நாடு நஜிப் தரப்புக்கு நீதிமன்றம் மதியம் வரைக்கும் அவகாசம்!

நஜிப் தரப்புக்கு நீதிமன்றம் மதியம் வரைக்கும் அவகாசம்!

594
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் ஓய்வூதிய நிதி அமைப்பு தலைவரான (KWAP) வான் அப்துல் அசிஸ் வான் அப்துல்லாவை குறுக்கு விசாரணை செய்ய நஜிப் தரப்புக்கு இன்று வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அவகாசம் உள்ளது.

இதனை முன்னாள் பிரதமரின் வழக்கறிஞர்களிடம் நேற்று புதன்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி தெரிவித்தார்.

அவர்கள் மதிய உணவுக்கு முன் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற ஒரு முட்டுக்கட்டையை நீதிபதி விதித்திருந்தார்.

#TamilSchoolmychoice

நேரக் கட்டுபாடு உள்ளதால் நஜிப் தரப்பு வழக்கறிஞர்கள் கடினமான கேள்விகளைக் கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமான விவகாரங்கள் கேள்விக்குட்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நஜிப்புடனான சந்திப்புகள், எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு 1 பில்லியன் ரிங்கிட் கடனை மட்டுமே வழங்குவதற்காக ஓய்வூதிய நிதி அமைப்பின் ஆரம்ப நிலைப்பாடு, பின்பு ஆகஸ்ட் 2011-இல் 2 பில்லியனாக அதிகரிக்கப்பட்டது போன்ற விவகாரங்கள் முக்கியமான சாட்சியங்களாகக் கருதப்படுகின்றன.