Home நாடு அம்பேங்க் மேலாளரின் கைபேசி தரவுகள் 1எம்டிபி விசாரணைக்காக எடுக்கப்பட்டது!

அம்பேங்க் மேலாளரின் கைபேசி தரவுகள் 1எம்டிபி விசாரணைக்காக எடுக்கப்பட்டது!

622
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய மலேசிய தொழிலதிபர் ஜோ லோ சம்பந்தப்பட்ட விசாரணைக்காக நீதிமன்றத்தின் உத்தரவுபடி ஒரு பிளாக்பெர்ரி கைபேசியிலிருந்து தரவை எடுத்ததாக தேசிய வங்கி அதிகாரி ஷுசைரிஸ்மான் சுயிப் கூறினார்.

அந்த கைபேசியானது கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி அம்பேங்க் தகவல் தொடர்பு மேலாளர் ஜோஹானா யூவிடமிருந்து பெறப்பட்டது.

இப்போது தேசிய வங்கியின் நிதி புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் அதிகாரியாக பணிபுரியும் ஷுசைரிஸ்மான், கைப்பற்றப்பட்ட கைபேசியிலிருந்து தரவை எடுத்தற்கான காரணத்தை விளக்கினார்.

#TamilSchoolmychoice

கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேசிய வங்கி வங்கி அதிகாரி அகமட் பார்ஹான் ஷாராபுடினிடமிருந்து தகவல்களைப் பெற்றதாகவும், அவர் நான்கு நபர்களின் பெயர்களை காட்டியதாகவும் ஷுசைரிஸ்மான் கூறினார். ஜோஹானா, கிரிஸ்டல், டேனியல் மற்றும் ஜோ லோ ஆகியோரின் பெயர்கள் குறித்த தகவல்களைப் பெற்று வருமாறு அதில் குறிப்பிட்டிருந்ததாக ஷுசைரிஸ்மான் தெரிவித்தார்.

1எம்டிபி ஊழலில் முக்கிய நபராக இருக்கும் ஜோ லோ தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகிறார்.