Home நாடு நெருப்புடன் விளையாட வேண்டாம், இளைஞர் விளையாட்டு துறை அமைச்சருக்கு எச்சரிக்கை!

நெருப்புடன் விளையாட வேண்டாம், இளைஞர் விளையாட்டு துறை அமைச்சருக்கு எச்சரிக்கை!

869
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: இளையோர்களுக்கான வயது வரம்பினை மாற்றி அமைக்கும் புத்ராஜெயாவின் நடவடிக்கை பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கதிற்கு நல்லதைக் காட்டிலும் தீங்கினை விளைவிக்கக் கூடியது என்று ஜோகூர் மாநில பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதி தலைவர் நோருல் ஹாஸ்ருல் அபு சாமா குறிப்பிட்டுள்ளார்.

ஜோகூர் விவகாரங்களில் தலையிட்டு நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று அவர் மறைமுகமாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரிடம் அவர் கூறியுள்ளார்.

வயது வரம்பு பிரச்சினை இன்னும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அவரது பார்வையில், மாநில அரசு இந்த விவகாரத்தை கையாள்வது சரியானது என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இங்கு வயது வரம்பு பரிந்துரையை நிராகரிப்பது ஓர் அரசியல் உணர்வாலல்ல, ஆனால், 2019- 2030-க்கான ஜோகூர் மாநிலத்தின் நிலையான அபிவிருத்தித் திட்டங்களுக்கு இணங்கி செயல்படும் மந்திரி பெசாரின் கூற்றுக்கு வழிவிடவே” என்று அவர் கூறினார்.

இது அனைத்து அமைச்சர்களுக்கும் அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது என்பதையும், அனைத்து தரப்பினர்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கேட்பதன் மூலம் திறந்த கதவுக் கொள்கையை எப்போதும் கடைப்பிடிப்பதற்கும் ஒரு நினைவூட்டலாக இருக்கும் என்று நோருல் கூறினார்.

இளைஞர் வயது வரம்பு தொடர்பான தீர்மானத்தை இதுவரை ஏழு மாநிலங்கள் நிராகரித்துள்ளதாக அவர் கூறினார்.

ஜோகூர் ஒருபுறம் இருக்க, சரவாக், சிலாங்கூர், பெர்லிஸ், பகாங், கிளாந்தான் மற்றும் கெடா ஆகிய மாநிலங்களும் இளைஞர்களின் வயது வரம்பை 40-ஆக தக்க வைத்துக் கொண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.