Home இந்தியா ஜூலை 23-ஆம் தேதி 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க வேண்டும்!

ஜூலை 23-ஆம் தேதி 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க வேண்டும்!

584
0
SHARE
Ad

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்றத்தில் குமாரசாமி தலைமையிலான அரசுகு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குள் (இந்திய நேரப்படி) நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் கெடு விதித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர் தங்கள் பதவி விலகல் கடிதத்தை அளித்துவிட்டு மும்பையில் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. பெரும்பான்மையை நிரூபிக்க கடந்த 18-ஆம் தேதி நம்பிக்கை தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி கொண்டு வந்தார்

#TamilSchoolmychoice

ஆனால் 18, 19 ஆகிய தேதிகளைத் தொடர்ந்து திங்கட்கிழமையும் நம்பிக்கை வாக்கெடுப்பு மீது விவாதம் நடைபெற்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

இதனிடையே அதிருப்தியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று காலை 11 மணிக்கு தன்னை நேரில் சந்திக்குமாறு சபாநாயகர் ரமேஷ் குமார் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த சந்திப்புக்குப் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது