Home One Line P1 “பிரதமர் பதவி விவகாரத்தில் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை!”- அஸ்மின்

“பிரதமர் பதவி விவகாரத்தில் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை!”- அஸ்மின்

676
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் தனது பதவிக் காலம் முடியும் வரையிலும் பிரதமராக பணியாற்ற வேண்டும் என்று ஆதரிப்பதன் மூலமாக தாம் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்று பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி விளக்கமளித்துள்ளார்.

நாட்டில் தொடர்ந்தாற் போல நிலைத்தன்மை உறுதிப்படுத்த இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியின் அழைப்பை ஆதரிப்பதாக பிகேஆர் துணைத் தலைவருமான அவர் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு புத்ராஜெயாவில் மகாதீருக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு குறித்து வினவப்பட்டபோது, பிரதமருடனான தனது வழக்கமான அமர்வுகள் பெரும்பாலும் பொருளாதாரம் மற்றும் அமைச்சரவை விவகாரங்களை முன்னிலைப்படுத்தியதாக இருக்கும் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

மகாதீருக்கு அவர் அளித்த ஆதரவு பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை ஆதரிக்கவில்லை என்பதற்கு அறிகுறியா எனக் கேட்டபோது, தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம்” என்று அஸ்மின் கூறினார்.

அம்னோ, பாஸ் மற்றும் காபுங்கான் பார்டி சரவாக் (ஜிபிஎஸ்) ஆகிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கிடையேயான சந்திப்பில் இணைய மூத்த அமைச்சரவை அமைச்சர் ஒருவர் அழைக்கப்பட்டதாக நேற்று வியாழக்கிழமை ஸ்டார் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், அஸ்மின் கலந்து கொண்டாரா என்பதற்கு பிரதமர் பதிலளிக்கவில்லை.