Home One Line P2 அருள்நிதி- ஜீவா, இருவரும் களத்தில் சந்திக்க தயார்!

அருள்நிதி- ஜீவா, இருவரும் களத்தில் சந்திக்க தயார்!

759
0
SHARE
Ad

சென்னை: நடிகர் அருள்நிதி மற்றும் ஜீவா இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘களத்தில் சந்திப்போம்’.

மாறுபட்ட கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதியுடன் முதல் முறையாக நடிகர் ஜீவா கை கோர்த்துள்ளார்.

இதனிடையே, இப்படத்தின் முதல் தோற்றம் நேற்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும், இத்திரைப்படத்தில், பிரியா பவானி ஷங்கர் மற்றும் மஹிமா மோகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இயக்குனர் இராஜசேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை அபிநந்தன் ராமானுஜம் மேற்கொள்கிறார்.